Wednesday, September 23, 2009

" Colourful hands,Makes difference "



I designed this screen with Water paints nd Hands , got prize too...
"Colourful hands together "

Saturday, September 19, 2009

வெட்கம்


வரம் கொடு அன்னையே !!



வரம் கொடு அன்னையே !!


உன் பிஞ்சு பாதம்
என் நெஞ்சை மிதித்து
துள்ளி விளையாட !

உன் பிஞ்சு விரல் பிடித்து

நடை பயில !

உன் மழலை சொல் கேட்டு
இவ்வுலகம் எனதான தொரு
மகிழ்ச்சியை எட்ட !


உனக்கு சோறூட்டி
நான் பசியாற !


கனவின் பேரிசையிலும்
உன் அழுகையை ரசிக்க !


இன்னும் எவ்வளவோ ஆசைகள்
வரம் கொடு அன்னையே !


அடுத்த பிறவியில்
நீ என் மழலையாய்
நான் உன் தாயாக ஜனிக்க !!


வரம் கொடு அன்னையே !!

காந்தி - வன்முறை


அஹிம்சா மூர்த்தி மகாத்மா காந்தியும்
வழிகாட்டினார் வன்முறைக்கு !!
தன் பொக்கை வாய் சிரிப்பால் ....

( தன் படம் போட்ட பணத்தால் )

மன்மத லீலையில்...




ஏய் பெண்ணே !!



நம் விரலிடை ஸ்பரிஷம்


போதும் பெண்ணே !



இதய பள்ளத்தாக்குகளில்


பூகம்பம் ஏற்பட !!



நீ தொட்டு விட்ட நொடி முதல்


நான் கரை தாண்டிய காட்டாறு !!



முத்தம் கொடுத்த மோகம் தானே


நீ அணையாத எரிமலை ..




பஞ்ச பூதமும் நம்முள் அடக்கம்


முத்தம் கொண்டு மோகம் கண்ட



மன்மத லீலையில்...



கன்னிக்(கு) கவிதை

அந்த அந்தி பொழுதில்
கல்லூரி கலைகையில்
படிதாண்டி பயணித்து
உனக்காய் நான் நிற்க
சொல்லாமல் சென்ற
நின் செயலின் சிந்தைகளையும்
நின்னையும் என் எதிர்பார்பையும்
எழுதுகோலில் ஏற்றி
தலை குனிந்து மையழுதான்
என் தோழன் ....... - எழுதுகோல்

அன்று தோன்றியது,
கன்னிக்(கு) கவிதை...
"" (முதல் கவிதை ) '''




திரும்பி பார் !



திரும்பி பார்த்து விட்டு போ !!
ஒவ்வொரு முறையும்
பேசி விட்டு பிரியும் போது
கோரிக்கை மனு வாசித்து விட்டு
படபடக்கிறது என் இதயம் !!
திரும்பி பாரடி என் காதலி !!