Saturday, September 19, 2009

வரம் கொடு அன்னையே !!



வரம் கொடு அன்னையே !!


உன் பிஞ்சு பாதம்
என் நெஞ்சை மிதித்து
துள்ளி விளையாட !

உன் பிஞ்சு விரல் பிடித்து

நடை பயில !

உன் மழலை சொல் கேட்டு
இவ்வுலகம் எனதான தொரு
மகிழ்ச்சியை எட்ட !


உனக்கு சோறூட்டி
நான் பசியாற !


கனவின் பேரிசையிலும்
உன் அழுகையை ரசிக்க !


இன்னும் எவ்வளவோ ஆசைகள்
வரம் கொடு அன்னையே !


அடுத்த பிறவியில்
நீ என் மழலையாய்
நான் உன் தாயாக ஜனிக்க !!


வரம் கொடு அன்னையே !!

No comments:

Post a Comment